ஆடி மாத வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும், ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும், தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் ராகு கால கோவில் என்று அழைக்கப்படும் கீழவாசல் வட பத்திர காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், இதையடுத்து இன்று
ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வடபத்ர காளியம்மன் கோவிலில் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்