Skip to content

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் 350 ஆட்டோக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் பரபரப்பு

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் கடந்த 16-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனால் மத்திய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஜங்ஷன் மற்றும் திருச்சி மத்திய பஸ் நிலையப் பகுதியிலுள்ள 350 -க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் இன்று அணிவகுத்த படி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் பஸ் நிலையத்தின்

பின்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே உள்ளூர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியின் எதிர்புறம் இந்த ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றினர். இதனால் உள்ளூர் ஆட்டோ டிரைவர்களுக்கும் ,ஜங்ஷன்,மத்திய பஸ் நிலையப் பகுதியில் இருந்து அங்கு சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையப் பகுதியில் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மோதல் நடைபெறாமல் தடுப்பதற்காக அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலைய பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் குவிந்ததாலும்,பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!