ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் கோபி (வயது 34)திருவரங்கம் பகுதியில் ரெடிமேட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 9 மணி அளவில் திருவரங்கத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது காவிரி பாலம் ஓடத்துறை பகுதி அருகில் வரும் பொழுது இவருக்கு முன்னாள் தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்ற கோபி திடீரென்று வலதுபக்கமாக தனது வாகனத்தை திருப்பினார். அப்பொழுது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரங்கம் சென்ற ஒரு ஆட்டோ எதிர்பாராதமாக கோபி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் திடீரென்று கோபி பஸ் சக்கரத்தில் விழுந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கோட்டை வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உடல் நசுங்கி இறந்த கோபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவங்களுக்கு கோட்டை வடக்கு போக்குவரத்து பலனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் காவிரி பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது -விபத்தில் பலியான கோபிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது தற்பொழுது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு
- by Authour
