Skip to content

குளித்தலை அருகே பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன் வயது 20 இவர் இன்று தனது பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றுள்ளார்.

அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில் சென்ற போது எதிரே கரூரை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் மகாதேவன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மகாதேவன் ஹெல்மெட் அணிந்து சென்ற போதிலும் பேருந்து மீது மோதியதில் அவர் தலை சிதறி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!