Skip to content

தமிழக புதிய டிஜிபி யார்? ரத்தோர், சீமா கடும் போட்டி

  • by Authour

தமிழக  சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன்  முடிவடைகிறது. எனவே புதிய  டிஜிபியை தேர்வு செய்​யும் பணி  இப்போதே தொடங்கி விட்டது.  முதல்​கட்​ட​மாக சட்​டம் – ஒழுங்கு டிஜிபிக்கு தகு​தி​யான 8 பேர் பட்​டியல்  தயார் செய்யப்பட்டுள்ளது.   குறைந்த பட்சம் இன்னும் 2 வருடமாவது சர்வீஸ் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் இந்த பட்டியலில் இடம் பெற முடியும்.

தமிழக அரசு அனுப்​பும் 8 பேர் கொண்ட பட்​டியலில் தகு​தி​யுள்ள 3 பேரை தேர்வு செய்து மத்​திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்​பும். அவர்​களில் ஒரு​வரை, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் டிஜிபி​யாக (சட்​டம் – ஒழுங்​கு) நியமிப்​பார். சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் டி.ஜி.பிக்கள் சீமா அகர்​வால், ராஜீவ் குமார் மற்​றும் சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய மூவரும் முதலிடத்​தில் உள்​ளனர்.

இந்த மூன்று அதி​காரி​களும் மத்​திய அரசில் பணி​யாற்​றிய அனுபவம் கொண்​ட​வர்​கள். இவர்​கள் 3 பேரை​யும் மத்​திய அரசு பரிசீலித்து தமிழக அரசுக்கு அனுப்​பலாம். பணி அனுபவம், தகுதி மற்​றும் செயல்​திறன் அடிப்​படை​யில் இந்த 3 பேர் பட்​டியலில் மாற்​றம் ஏற்​பட​வும் வாய்ப்பு உள்​ளது.

இருப்​பினும் சீமா அகர்​வால், சந்​தீப் ராய் ரத்​தோர் இடையே புதிய டிஜிபிக்​கான போட்டி உள்ள​தாக​வும் அதில் சந்​தீப் ராய் ரத்​தோர் முந்​து​வதற்​கான வாய்ப்பு உள்​ள​தாக​வும் போலீஸ் வட்​டாரத்​தில் பேசப்​பட்டு வரு​கிறது. ​

காவல் துறை​யில் 14 டிஜிபி பணி​யிடங்​கள் இருந்​தா​லும் சட்​டம் – ஒழுங்கு டிஜிபியே தலைமை டிஜிபி​யாக​வும், காவல் படை தலை​வ​ராக​வும் செயல்​படு​வார்.  இது தான் அதிகாரம் மிக்க பதவி. எனவே இந்த பதவியை பிடிக்க கடும்போட்டி  நிலவுவது வழக்கமான ஒன்று தான்.

 

 

error: Content is protected !!