அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
2026 ல் அ.தி.மு.க ஆட்சியமைக்கும். தஞ்சாவூர் மாவட்டம் விவசாய பூமி. இதை பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம். நிலையாக காவிரி நீரை பெற்றுத் தந்த அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம். கொரோனா கால கட்டத்தில் பதினோறு மாதம் விலையில்லாமல் ரேஷனில் பொருட்களை வழங்கிய அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம். மக்களை நேசித்தோம். மக்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்தோம். விலை வாசி விண்ணை முட்டி விட்டது. அரிசி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. விலைவாசி குறைய இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
50 மாதத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட தி.மு.க அரசு கொண்டு வரவில்லை. தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறிய படி காலி பணியிடம் நிரப்பப் பட வில்லை. அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு மூலம் 2818 மாணவர்கள் கட்டணமின்றி மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றனர். காவல் துறை செயல்பாடுகள் முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.
மக்களை ஏமாற்றுகின்ற ஒரே அரசாங்கம் தி. மு.க அரசாங்கம். பயிர் கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம் வழங்கிய அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம் . சிறு பான்மை மக்கள் உஷாரா இருங்க. சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.முக. எப்போதும் உங்கள் பக்கம் நிற்கும். மக்களுக்காக அ.தி.மு.க இருக்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு 5, 600 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம்.
சிறு பான்மை மக்களுக்கு நிறைய நன்மை செய்த அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம். சிறு பான்மை மக்களை அரணாக பாதுகாத்த அரசாங்கம். பா.ஜ.க வோடு கூட்டணி வைத்த போது திமுகவிற்கு பா.ஜ.க மதவாத கட்சியாக தெரியவில்லையா? எந்தச் சூழ்நிலை யிலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். கொள்கை நிரந்தரம்/
இவ்வாறு அவர் பேசினார்.