நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியது. முதல்நாளே எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று 3ம் நாளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளன.
இதற்கிடையே மேலவையில் வைகோ பேசினார். அப்போது அவர் தமிழக மீனவர்கள் பிரச்னை மற்றும் இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதல் குறித்து பேசினார். எதிர்கட்க்கட்சிகள் போராட்டம் காரணமாக இன்றும் அவை ஒத்திவைக்கப்பட்டன.
h