கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை,
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் , மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னாள் அமைச்சர், கரூர் சட்டமன்ற உறுப்பினர் V செந்தில்பாலாஜி தலைமையில் முகாம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த முகாம் வரும் சனிக்கிழமை, காலை 8மணிமுதல் மாலை 3 மணிவரை கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாம் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள்
10ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப ஏற்பாடு செய்துள்ளது.
8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ (ITI) டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், உள்ளிட்ட எந்த படிப்புகள் படித்திருந்தாலும், கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைகள் வழங்க நிறுவனங்கள் தயாராக உள்ளது.
வேலையில் சேர விரும்பும் நபா்கள் தங்களது கல்விச்சான்றிதழ் நகல்கள் ‘அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயவிவர குறிப்பு (Bio – Data) இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ‘அரசு போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்தல் *தகுதியுடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம் அளித்தல் ஆகிய பணிகளும் இந்த முகாமில் நடக்கிறது.
வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் முன் பதிவுசெய்யலாம். இந்த தகவலை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்து உள்ளார். மேலும் விவரங்களுக்கு 93452 61136, 93605 57145 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.