Skip to content

கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ பைனான்ஸ், ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ கிரிடிட்ஸ், ஸ்ரீ ஆனைமலை ஆட்டோ பைனான்ஸியர்ஸ், ஸ்ரீவாரி பைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த 150 முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 7 கோடி ரூபாயை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் மீது கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் ராஜாசோமசுந்தரம் தலைமையில், கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கௌசர் நிஷா, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களின் பங்குதாரர்களாகிய குழந்தைவேல், நல்லசிவம், சீனிவாசன், நவலடி, சரவணன், கவாஸ்கர், சாந்தி, வீரப்பன் ஆகிய 8 நபர்களை இன்று 25.07.2025 கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி 8 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கரூர் பொருளாதார குற்றப்பிரிவு, அலுவலகத்தில் உடனடியாக புகார் அளிக்குமாறு அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர்.

error: Content is protected !!