தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்து கட்டடங்களைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல தஞ்சாவூர் பெரிய கோயில் உலக அளவில் மிகப்பெரிய புராதன சின்னமாக போற்றப்படுகிறது. இது மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் திகழ்கின்றன. இவற்றை பாதுகாப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இக்கலாசார மையங்களுக்கு
முன்னுரிமை கொடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றன. இத்தலங்களுக்கு தொல்லியல் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கருதி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு உகந்த தலமாக இருக்கும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் கஜேந்திர சிங் ஷெகாவத் பின் ஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சென்று வழிபட்டு, கட்டடக்கலைகளைப் பார்வையிட்டார்.