மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக பொறுப்பு வகிக்கும், மாவட்ட குற்ற பதிவெடுகள் கூடம் டிஎஸ்பி சையது பாபு, தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் குழுவினர் செம்பனார்கோவில் காவல் சரகம், கருவாழக்கரை வள்ளுவர் தெருவில் வசிக்கும் மணிகண்டன், என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, அவரது வீட்டு மோட்டார் அறையில் 110 லிட்டர் பாண்டி சாராயமும், 180 மிலி கொள்ளளவு கொண்ட பாண்டி சாராய பாட்டில்கள் 91 எண்ணிக்கைகள் கைப்பற்றப்பட்டது. சாராயத்தை சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்தித்திருந்த மணிகண்டனை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை அருகே 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல்
- by Authour
