வனப்பகுதியில் மேய்ச்சல் உரிமையை நிலைநாட்ட ஆகஸ்ட் 3-ல் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படவிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
மலையடிவாரத்தில் கால்நடைகளை மேய்க்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடம் இன்றி போய்விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூலை 10-ம் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில், ஆடு, மாடுகள் மாநாட்டை நடத்தினார். மேய்ச்சலுக்கு இடம் இன்றி இருப்பதால் அதைப் பெறுவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் அடுத்தகட்டமாக வனப்பகுதியில் மேய்ச்சல் உரிமையை நிலைநாட்ட ஆகஸ்ட் 3-ல் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படவிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதில் சீமான் பங்கேற்று மாடு மேய்ப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.