Skip to content

அதிமுக எம்.பிக்கள் பதவியேற்றனர்

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற  மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன், மற்றும் திமுக எம்.பிக்கள்  வில்சன்,  எஸ்.ஆர். சிவலிங்கம்,  கவிஞர் சல்மா ஆகியோர் கடந்த 25ம் தேதி பதவியேற்றனர்.  அதிமுக சார்பில்  வெற்றி பெற்ற  வழக்கறிஞர் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்றனர்.  அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் சிங்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இருவரும்,  கடவுளின் பெயரால் எனக்கூறி தமிழில் பதவிப்பிரமாணம்  எடுத்துக்கொண்டனர்.

error: Content is protected !!