Skip to content

நிலத்தை அபகரிக்க முயற்சி…. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சவரியம்மாள் தனது நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். அந்த மனுவில், “நான் கடந்த பல ஆண்டுகளாக பொய்கைக்குடி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் ராஜமாணிக்கம் கடந்த 12-ம் தேதி சாலை விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தியது யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

இந்நிலையில் எனது கணவரின் தந்தை பெயரில் பொய்கைக்குடி பகுதியில் உள்ள எனது வீட்டின் முன்பு இதே பகுதியை சேர்ந்த அருளானந்தம், அன்ன மாணிக்கம், ஜான் பீட்டர், சத்திய நாதன், துரை, வின்சென்ட் உள்ளிட்ட சிலர் கோவில் சப்பரத்தை நிறுத்தி வைத்துள்ளனர். எனது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நான் கேட்டபொழுது என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, என்னையும் எனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

என கணவர் இறந்ததில் மர்மம் உள்ளது. அவர் இறப்பதற்கு மேற்கண்ட நபர்கள் காரணமாக இருக்கலாம். எனது கணவர் இறந்து 10 நாட்களில் எங்களது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

error: Content is protected !!