1999ம் ஆண்டு மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வந்தது. திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஜெயலலிதா வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்தார். திமுக ஆட்சியை கலைக்க வாஜ்பாய் மறுத்ததால், வாஜ்பாய்க்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டில் தோல்வி அடைந்தது.
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக , அதிமுக கூட்டணி சேர்ந்து உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். அப்போது அவர் 1999ல் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழைத்து செய்துவிட்டோம் என்றார்.
ஆட்சியை கவிழ்த்தது ஜெயலலிதா, அவர் செய்தது வரலாற்று பிழையா என்ற கேள்விகள் எழுத் தொடங்கியது. இது தொடர்பான விளகத்தை அவரிடமே பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது அவர் தனது பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளது. நான் அப்படி பேசவில்லை என்று மறுத்து விட்டார்.