மென்பொறியாளர் கவின்குமார் என்பவரின் ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருப்பத்தூரில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் கவின்குமார் என்பவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணவ படுகொலை செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பாக மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் இரா. சுபாஷ் சந்திரபோஸ் கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசுகையில் கவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஆணவ கொலை படுகொலைக்கு தனி சட்டம் ஏற்ற வலியுறுத்தி பேசினார். உடன் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் கோகுல் அமர்நாத், நகர செயலாளர் ஆனந்தன், வேலூர் நாடாளுமன்றத் துணைச் செயலாளர் முருகேசன், நகர அமைப்பாளர் விக்கி (எ) விக்னேஷ், என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.