கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு காமாட்சியம்மன் அலங்காரம் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு
நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் நே்று
சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வேம்பு மாரியம்மனுக்கு – காமாட்சியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காமாட்சியம்மன் அலங்காரத்தை காண நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து காமாட்சியம்மன் அலங்காரத்தை தரிசனம் செய்து பின்னர் பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.