தென்னக ரயில்வே ஆர்.பி.எப் அனைத்து கோட்டங்களுக்குமான கால்பந்தாட்ட போட்டி திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை,திருவனந்தபுரம், பலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் உள்ள ஆர்.பி.எப் அணிகள் பங்கேற்கிறார்கள்.
முதலாவது போட்டியை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் பிரசாந்த் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.திருச்சி கோட்ட அணியும் , திருவனந்தபுரம் கோட்டம் அணியும் விளையாடிது. அதில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அணியினர் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றனர். போட்டியில் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.