Skip to content

பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று  அடுத்தடுத்து  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து பேசினர்.  இருவரும்  ஜனாதிபதியை அடுத்தடுத்து சந்தித்து பேசியதில் அரசியல்  முக்கியத்துவம் இருப்பதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தான்  ஜனாதிபதியிடம் பேசினார்கள் என்று கூறப்பட்டாலும்,  பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது.  ஜெகதீப் தன்கர் ராஜினாமா,  தினந்தோறும் நாடாளுமன்றம் முடக்கம், அமெரிக்க அதிபர் கொடுக்கும் நெருக்கடி,  விரைவில் மத்திய அமைச்சரவையில் நடக்க இருக்கும் மாற்றங்கள் குறித்தும்  இதில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

 

error: Content is protected !!