நாடகக் கலைஞர்கள் திறமைமிக்கவர்கள், அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் வாய்ப்பளிக்கவேண்டும் – அக்யூஸ்ட் திரைப்பட நடிகர் உதயா வேண்டுகோள். ஜேசன் ஸ்டூடியோ தயாரிப்பில், நரேன்பாலகுமார் இசையில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடிப்பில் வெளியான அக்யூஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும், கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, திருச்சியில் அக்யூஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள பேலஸ் திரையரங்கில் திரைப்பட குழுவினர் ரசிகர்களுடன் இருக்கையில் அமர்ந்து படம் பார்த்ததுடன், பேலஸ் திரையரங்கம் கட்டிடம் குறித்து வெகுவாக பாராட்டினார் இது போன்ற இது போன்ற திரையரங்குகளில் படம் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, தங்களது படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டனர், அப்போது படத்தைப் பார்த்த ரசிகர்கள் கணக்கு என்று கதையில் வரும் கதாபாத்திரத்தை நினைவு கூர்ந்து அவரை கூறியது, கதையில் வரும் சம்பவங்கள் குறித்து பேசியதும், இயக்குனரின் திரைக்கதையை பாராட்டியதும், மியூசிக் பாராட்டியும், பிரியாணி பாடலை பாடியும் பார்வையாளர்கள் திரைப்பட குழுவினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். திருச்சிக்கு வருகை தந்த படக்குழுவினரை திரைப்பட நடிகர் செல்வா தலைமையில், திருச்சி மாவட்ட விநியோகஸ்தர் சேரன் ஏற்பாட்டில், திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கம் பொதுச்செயலாளர்
கலைமாமணி முகமது மஸ்தான் முன்னிலையில், பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் நிறுவனர் தலைவர் வேல்முருகன், பேலஸ் திரையரங்கின் உரிமையாளர் மற்றும் திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் ஒன்றிணைந்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், தயாரிப்பாளருமான உதயா கூறுகையில்… பொதுமக்கள் அக்யூஸ்ட் படத்தை கொண்டாடுவதாகவும் இந்த இந்தப் படத்தின் கதாபாத்திரத்தின் பெயரைக்கொண்டு அழைப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவதுடன், வெற்றியை அழித்தது மூலம் தொடர்ந்து பல நல்ல படங்களை அளிக்கவேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. ஜெயிக்க வேண்டும் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக படம் வெற்றி பெற்றுவருகிறது, மிகப்பெரிய வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சினிமாவில் ஜெயிக்கவேண்டும் என பல இளைஞர்கள் உள்ளார்கள், அவர்கள் அனைவரும் தொடர்ந்து போராடினால் ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என தெரிவித்துக்கொண்டார்.
நாடகக் கலைஞர்கள் மிகுந்த திறமை மிக்கவர்கள் அவர்களை திரைப்படங்களில் பயன்படுத்த வேண்டும், என்னுடைய படங்களில் நாடக கலைஞர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு அளித்துவருகிறேன், அதேபோன்று மற்ற தயாரிப்பாளர்களும் நாடகக் கலைஞர்களை தங்களது படங்களில் பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார். வாரத்திற்கு 10 படங்கள் வெளியாகும்போது தியேட்டர் கிடைப்பதில் சிரமம் உள்ளது, தியேட்டர் காரர்கள் சிறிய படங்களுக்கு சப்போர்ட் செய்கிறார்கள், அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைத்து குறைந்த அளவு படங்களை வெளியிட வேண்டும், உதயநிதி படங்கள் வெற்றிபெறுவது என்பது கடவுள்கொடுத்த பாக்கியம்.
திரைப்படங்களை வெளியிடுவதை ஒருங்கிணைந்து வெளியிட வேண்டும் அதேபோன்று ரீ ரிலீஸ் படங்களை தடுக்கவேண்டும், திரைப்படங்களை மற்றும் தயாரிப்பாளர்களை காக்கவேண்டும். நடிகர் சங்க கட்டிடம் திறக்க வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசை, ஒவ்வொருவரின் வியர்வையும் அதில் உள்ளது, எந்தஒரு பகைமையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் விரைவில் கட்டிடத்தை திறக்க வேண்டும், விஜயகாந்தின் பெயர் ஒரு மண்டபத்திற்கு வைக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். இந்த போட்டிகளுக்கு மத்தியில் இந்த படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றும் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். அனைத்து படங்களும் வெற்றி பெறவேண்டும்.
நடிகர் விஜய் சிறந்த மனிதர் அதுமட்டுமின்றி, எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற அவரது நல்ல மனது, அவர் நினைத்த காரியம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டார் . மலையாள படங்கள் அதன் அமைப்பை ஒருங்கிணைத்து படங்கள் வெளியிடுவதால் அங்கு வெளியாகும் படங்கள் கொண்டாடப்படுகிறது அதேபோன்று தமிழ்திரைஉலகமும் இதனை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.