Skip to content

கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பங்கவுண்டன்புதூரை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35).லாரி அதிபர்,  இவரது மனைவி பாரதி (26) இந்த தம்பதியினர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு  ஒரு ஆண் மூன்று பெண் குழந்தைகள் என 4 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று  இரவு  கோவிந்தராஜ்  உணவு அருந்திவிட்டு மனைவி பாரதி, மற்றும் ஒரு வயதே ஆன தனது ஆண் குழந்தை அனீஸ்வரன் ஆகியோருடன் படுக்கையறையில் உறங்கச் சென்றதாக தெரிகிறது. பின்னர் படுக்கை அறையை பூட்டிவிட்டு தனியே வெளியே வந்த அவர் அதிகாலை 3 மணி அளவில் கோவிந்தராஜ் வீட்டின் ஹாலில் படுத்திருந்த 3 பெண் குழந்தைகளை அரிவாளை கொண்டு தலைப்பகுதியில் வெட்டி துண்டித்து கொலை செய்து, பின்னர் அவரும் அருகில் இருந்த பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு படுக்கையறையில் படுத்திருந்த மனைவி பாரதி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவிந்தராஜ், பிரக்திஷா ஸ்ரீ (10)
ரித்திகா ஸ்ரீ (7), தேவா ஸ்ரீ (6) ஆகிய மூன்று பெண் குழந்தைகளின் சடலங்களை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக காவல் துறையின் விசாரணையில் கோவிந்தராஜ் தனது தொழில் மற்றும் வீட்டு கடன் காரணமாக 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகவும் அதற்கு முறையாக பணம் கட்ட முடியாத நிலையில் 3 குழந்தைகளை  கொன்றுவிட்டு   இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

 

error: Content is protected !!