Skip to content

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு ஆடி தெய்வத் திருமண விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று 120 அடி கொண்ட ஆலய கோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலய

மண்டபத்தில் இருந்த பிரம்மாண்ட மாலையை பக்தர்கள் தோலில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்தனர். அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க, கேரளா வாத்தியம் இசைக்கப்பட்டு பக்தர்கள் திருக்கரங்களால் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய கோபுரத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்ற கோஷத்துடன் விழாவை சிறப்பித்தனர்

error: Content is protected !!