பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பாமக தலைவர் நான் தான் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் கட்சி தலைவர் நான் தான் என்பதை நிரூபிக்க அன்புமணி நாளை பொதுக்குழு கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த பொதுக்குழுவில் தானே கட்சித்தலைவர் என்பதை உறுதி செய்ய, பொதுக்குழு ஒப்புதலை பெற அன்புமணி திட்டமிட்டு உள்ளார்.
இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமதாஸ் தரப்பில் முரளி சங்கர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில்கூறியிருப்பதாவது:
கடந்த 2022ம் ஆண்டு மே 28ல், கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவி காலம், கடந்த மே 28ல் நிறைவு பெற்றுள்ளது.
கட்சியின் புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மே 30ம் தேதியில் இருந்து, தலைவராக செயல்பட்டு வருகிறார். மாநிலத் தலைவரின் பதவி காலம் முடிவடைந்தால், அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், கட்சி நிர்வாக பொறுப்பும், கட்சியின் நிறுவனருக்கே உள்ளது என, ஜூலை 7ம் தேதி நடந்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. கட்சி விதிகளும் திருத்தப்பட்டு விட்டன.
கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட, கட்சியின் நிறுவனருக்கு தான் அதிகாரம் உள்ளது. அன்புமணி தற்போது கட்சி தலைவர் இல்லை.அவ்வாறு இருக்கும் போது, நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் அனுமதியின்றி, அரசியல் ரீதியில் பல்வேறு கூட்டங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.அவ்வாறு இருக்கும் போது, நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் அனுமதியின்றி, அரசியல் ரீதியில் பல்வேறு கூட்டங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வாறு இருக்கும் போது, நிறுவனரும், தலைவருமான ராமதாஸ் அனுமதியின்றி, அரசியல் ரீதியில் பல்வேறு கூட்டங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
டி.ஜி.பி.,யிடம் புகார் கட்சி தலைவரும், நிறுவனருமான ராமதாசின் அனுமதியின்றி, அன்புமணி 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிராக, டி.ஜி.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கட்சி பொதுக்குழு கூட்டம், வரும் 9ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கும் என, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் அன்புமணி அறிவித்துள்ளார்.
அன்புமணியின் இந்த அறிவிப்பால், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்குஇன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடங்கியதும், நீதிபதி, வழக்கு விசாரணை இப்போது வேண்டாம், ராமதாஸ், அன்புமணி ஆகியோரை இன்று மாலை 5.30 மணிக்கு என் அறைக்கு வரச்சொல்லுங்கள். நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியதைத் தொடர்ந்து விசாரணை நிறுத்தப்பட்டது. இன்று மாலை தந்தையும், மகனும் இந்த வழக்கில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தை, மகன் இருவரையும் சமாதானமாக செல்லும்படி நீதிபதி அறிவுரை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதியின் இந்த உத்தரவு குறித்து அன்புமணி கட்சி நிர்வாகி வக்கீல் பாலு கூறியதாவது:
இந்த வழக்கை 5 நிமிடத்தில் முடித்து விடுவேன். உங்கள் இருவரின் நலன் கருதி தனது அறைக்கு வாருங்கள் வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்று அன்புமணி இன்று நீதிபதி அறைக்கு வருவார். நாங்களும் சுமூகமாக போக விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
.