Skip to content

இன்று உலக யானைகள் தினம்

இன்று(ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பது. உலகம் முழுவதும் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும். முதன் முதலில் இந்த தினம் 2012 ஆகஸ்ட் ,12ல் கொண்டாட தொடங்கினர். ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆகஸ்ட்,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.உலகம் முழுவதும் யானைகளை கொல்லும் போக்கு இருந்து வருகிறது. யானைகள் வாழ்விடத்தை  மக்கள்  ஆக்கிரமிக்கும் போக்கும் காணப்படுகிறது. இவற்றை மாற்ற  விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.

 

 

error: Content is protected !!