கரூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாற்றுவோம் எனும் வாசகத்தை முன்னிறுத்தி மாநில
அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்று நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியானது ஜவகர் பஜார் பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக சென்று திருவள்ளூர் மைதானத்தில் முடிவடைந்தது இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு போதை ஒழிப்பு குறித்த கோஷங்களை எழுப்பினர் பின்னர் போதை பொருள் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு தடுப்பு பிரிவு காவல்துறையினர்,மற்றும்கல்லூரி முதல்வர் என பலர் கலந்து கொண்டனர்.