Skip to content

அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் அரியலூர் மாவட்டத்தில் இன்று வெளியானது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். அவரது 171 வது திரைப்படமான கூலி திரைப்படத்தில் நடிகர்கள் நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சோபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்றோர் இணைந்து நடித்துள்ளளர்.

இந்நிலையில் அரியலூரில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தை காண வந்த அவரது ரசிகர்கள் திரையரங்கின் வாசலில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பின்னர் திரையரங்கு வாசலில் வைக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட கட்டவுட்டிற்கு, பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி அதனை உடைத்து வழிபட்டனர். மேலும் ரசிகர் ஒருவர் ஒரு குடம் முழுக்க பால் எடுத்து வந்து கட்டவுட்டில் இருந்த ரஜினியின் உருவத்தில் ஊற்றி அபிஷேகம் செய்தார்.

மேலும் கூலி திரைப்படத்தை காண வந்த அரியலூர் ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதிலும் குறிப்பாக ஒருவர் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் உருவத்தை உடல் முழுக்க டாட்டூவாக பதிந்து திரைப்படத்தை காண வந்திருந்தார். மேலும் அவரது தலையின் பின்புறம் கூலி எனும் எழுத்துக்கள் பதித்து முடி வெட்டி வந்திருந்தார்.

இந்நிலையில் படம் வெளியாகும் முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினி என எழுதி நம்பர் 1 என்ற வாசகம் திரையிடப்பட்டது. இதற்கு கருத்து தெரிவித்த ரஜினி ரசிகர் வினோத் என்பவர் சூப்பர் ஸ்டார் என்றாலே அது ஒருவர் தான். எப்படி ஒரு சூரியன், ஒரு சந்திரனோ அந்த போன்று சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் என்று பேட்டியளித்தார்.

மெகா எதிர்பார்ப்பு நிறைந்த கூலி திரைப்படம் – கோவையில் உற்சாகத்தில் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள் !!!*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.

அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைப்பில், நாகர்ஜுனா, சௌபின் ஷஹீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அமீர்கான் நடித்து இருக்கும் இந்த படம்,

ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரையுலக சாதனையை நினைவு கூரும் வகையில் சிறப்பு தலைப்புடன் தொடங்குகிறது.

கோவை முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் இன்று காலை முதல் காட்சியிலேயே ரசிகர்கள் வெள்ளம் கூடியது. பல இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்தும், ஜமாப் அடித்து, நடனம் ஆடி கொண்டாடினர். முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் முன்னதாகவே முழுவதும் விற்றுப்போன நிலையில், திரையரங்குகள் முன்பு நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்து இருந்தனர்.

கூலி திரைப்படத்தின் வெளியீடு, கோவையில் திருவிழா போல கொண்டாடப்பட்டு, சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கூலி திரைப்படம் ஆனது இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திண்ணப்பா, அஜந்தா, அமுதா, கலையரங்கம் உள்ளிட்ட நான்கு திரையரங்களில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களுக்காக இன்று 5 சிறப்பு காட்சிகள் காலை 9 மணி துவங்கிய நிலையில் ரசிகர்கள் காலை முதல் திரையரங்கத்திற்கு முன்பாக குவிந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் கதீம் ரவி தலைமையில் நடைபெற்றது

திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 50 வருட பொன்விழா ஆண்டில் வெளிவரும் கூலி திரைப்படத்தை கொண்டாடும் வகையில் திரையரங்கத்திற்கு முன்பாக பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், வாழைமர தோரணங்கள் கட்டியும், கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்தும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களின் இடது கைகளில் படத்தின் பெயர் கூலி என்ற எழுத்து பொறிக்கப்பட்ட கைகளில் கட்டிக் கொண்டு திரைப்படத்தை காண சென்றனர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

error: Content is protected !!