Skip to content

திருப்பத்தூர் அருகே வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏரிக்கோடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்கவானம் மகன் ஜெயபாலு(50) கூலி வேலை செய்து வருகிறார். சாவித்திரி(45) என்பவருடன் திருமணமாகி முன்று பெண் ஒரு ஆண் பிள்ளை உள்ள நிலையில்,
பெரிய மகளுக்கு திருமணமாகி கணவருடன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்‌.

கணவன் மனைவியும் சேர்ந்து மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சாவித்திரி ஏரிக்கோடி பகுதியில் உள்ள சிக்கன் ரைஸ் கடையில் பாத்திரம் சுத்தம் செய்யும் வேலை செய்து வந்துள்ளார், தினந்தோறும் சம்பள பணத்தை வாங்கி கொண்டு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி விட்டு மது போதையில் விட்டுக்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.

காலை நேரமாகியும் சாவித்திரி வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டில் பார்த்துள்ளனர். அப்போது சாவித்திரி நிர்வாண கோலத்தில் எரிந்த நிலையில் உள்ளதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல்

தெரிவித்தனர்.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், டிஎஸ்பி சௌமியா ஆகியோர் சம்பவ இடத்தில் கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும் நிர்வாண கோலத்தில் எரிந்த நிலையில் இருந்த சாவித்திரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சாவித்திரியை யாராவது கொலை செய்து விட்டு எரித்தார்களா? தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாவித்திரியில் கணவர் ஜெயபாலுவை கிராமிய போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்வாண கோலத்தில் எரிந்த நிலையில் பெண் சடலத்தை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது..

error: Content is protected !!