சென்னை அம்பத்தூர் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் பணிபுரியாற்றிய தூய்மை பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பணி நீக்கம் செய்த நிலையில், அந்த தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தினர். நிலையில் நாளை சுதந்திர தின விழா நடைபெற உள்ளது முன்னிட்டு, ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், தொழிலாளர்களின்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேலையிழந்த தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும், அரசாணை எண் 62-ஐ தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சார்பில் ஒருமைப்பாடு நடைபெற்றது. முன்னதாக, எல்டியுசி மாநில செயலாளர் வீரச்செல்வன் தலைமையில் அச்சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டு மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மண் தன்னுரிமை இயக்க தலைவர் பேராசிரியர் ஜெயராமன், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் கோபிநாத் தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன், எல்டியுசி சீர்காழி இளங்கோவன். தமிழர் உரிமை இயக்கத் தலைவர் சுப்புமகேசு உள்ளிட்ட ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.