தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் இன்று சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மண்டல பொது மேலாளர் D. சதீஷ்குமார் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து பொது மேலாளர் சதீஷ்குமார் சுதந்திர தின விழா வாழ்த்து செய்தியில் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் நடைபெறுகின்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் நமது பணியாளர்களின் குடும்பத்தினர்கள், குழந்தைகள், அல்லும் பகலும் அயராது பாடுபடும் நமது ஓட்டுநர்கள், நடத்தினார்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், பாதுகாவலர்கள், திறம்பட கண்காணிப்பு பணியையும் செய்கின்ற மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர்கள் ,அலுவலகப் பணியாளர்கள், பொறியாளர்கள் ,கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவருக்கும் காலை வணக்கத்தையும், சுதந்திரதின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வரின் உத்தரவின்படியும், போக்குவரத்து துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படியும் போக்குவரத்து துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நமது திருச்சி மண்டலம் 1015 பேருந்துகளில் உள்ளடக்கிய 15 கிளைகள் பிரிவுகள், பயிற்சி மையம் மற்றும் மண்டல அலுவலக வளாகம் அடங்கிய கட்டமைப்புகளுடன் திருச்சி பெரம்பலூர் அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 7.67 லட்சம் பயணிகளுக்கும் மேலாக சீரும் சிறப்புமாக பயணச் சேவையினை செய்து வருகிறது.
2024 25 ம் ஆண்டில் ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை பயணம் 2,44,770 அரசு மற்றும் ம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு 31,353 அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கும் இலவச பயணச்சீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் ,பார்வையற்றோர் மொழிப்போர் தியாகிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் காவலர்கள் அவர்களின் வாரிசுகளுக்கு7925 இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க மகளிர் மாற்றத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சேவை செய்து வரும் நிலையில் நாளொன்றுக்கு 2.91 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருவதுடன் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
மேலும் தீபாவளி, பொங்கல் பண்டிகை திருவிழா காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளை இரவும் பகலும் தொடர்ந்து அயராது இயக்கி வருகிறோம் . சுற்றுப்புற சூழ்நிலை மாசு குறைக்கும் பொருட்டு 2024,2025 ம் ஆண்டில் 273BS6 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 190 புதிய புறநகர் பேருந்துகளும் 71 புதிய நகர பேருந்துகளும் மொத்தம் 261 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது மீதமுள்ள பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
முதல்வரின் உத்தரவுபடி திருச்சி மண்டலத்திற்கு 23.25 கோடி ரூபாய் மதிப்பிலான 25 புதிய சொகுசு தாள்தழபேருந்துகள் ஒதுக்கப்பட்டு மாற்றத்திறனாளிகள் முதியோர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக எறிச் செல்லும் வகையில் தற்போது 10 பேருந்துகள் திருச்சி கலைஞர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ஆகஸ்ட் 2024 முதல் 2025 வரை கருணை அடிப்படையில் வாரிசு பணி முறையில் ஒரு ஓட்டுநர் மற்றும் 18 நடத்துனர்கள் சேர்த்து மொத்தம் 19 பேர்களுக்கு வாரிசு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மண்டலத்தில் ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரை 22 தேர்வு நிலை நடத்துனர்களுக்கு பதவி உயர்வும் 23 தேர்வுநிலை ஓட்டுனர்களுக்கு ஓட்டுநர் போதகர் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற பணியாளர் மற்றும் பணியாளரின் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதிக டீசல் செயல் திறன் ஓட்டுனர்கள் 31 நபர்களுக்கும்,மற்றும் நடத்துனர்கள்30பேருக்கும், தொழில் நுட்ப பணியாளர்கள் 17, பணியாளர்களின் குழந்தைகள் 15 நபர்களுக்கும், பணியாளர்கள் போட்டிகள் ஒன்பது பேருக்கும், அலுவலக பணியாளர் மூன்று ,கண்காணிப்பாளர் ஒரு நபருக்கும் ,பரிசோதகர் இரண்டு,ஓட்டுனர் போதகர் ஒரு நபருக்கும், உதவி பொறியாளர் ஒருவருக்கும் ,கிளை மேலாளர் ஒரு நபருக்கும் என மொத்தம் 111 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் .சாமிநாதன்,
புகழேந்தி ராஜ் , மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.