இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை பொதிகை வளாகத்தில் தேசிய கொடியினை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
சிவ. வீ. மெய்யநாதன் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அதைத்தொடர்ந்து சென்னை மயிலாப்பூர்
அருள்மிகு மாதவப் பெருமாள் கோவிலில்
நடந்த சிறப்புவழிபாட்டில் பங்கேற்றும், பின்னர் நடந்த பொது விருந்திலும்
அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பங்கேற்று பக்தர்களுடன்சேர்ந்து உணவருந்தினார்.
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 79- வது சுதந்திர தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நூலகர்கள் கண்ணன், சுப்பிரமணியன், குமுதா, கண்மணி, சரஸ்வதி, தாமோதரன், முத்தையா, கண்ணன், நூலகப் புரவலர் கோ.சாமிநாதன் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.