ரஜினி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் கூலி படம் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
இந்நிலையில் கோவையில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி திரையரங்கிற்கு குழந்தைகளுடன் சிலர் கூலி படத்திற்கு சென்று உள்ளனர்.
திரையங்க நிர்வாகம் அனுமதி மறுத்ததால், படம் பார்க்க சென்றவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுவாக ஒவ்வொரு திரைப்படத்திற்கும், அதன் கதை, காட்சிகள், வசனங்கள் ஆகியவற்றை பொறுத்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்குவார்கள். அந்த வகையில் கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. விதிகள் படி A சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை திரையரங்கில் அனுமதிக்க மாட்டார்கள். இதை ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போதே எச்சரிக்கையாக அறிவிப்பாக காட்டுவார்கள். அதையும் மீறி திரையரங்கங்களில் குழந்தைகளை அனுமதிப்பதாக புகார் உள்ளது. அதே போல கூலி படத்திற்கும் ஆங்காங்கே சில திரையரங்குகளில் விதிகளை மீறி குழந்தைகளை அனுமதிப்பதாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கே.ஜி திரையரங்கிற்கு கூலி திரைப்படப் பார்க்க வந்தனர். அப்பொழுது அவர்களுக்கு அனுமதி மறுத்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி திரும்பி செல்ல அறிவுரைத்தனர். மேலும் அவர்கள் சிறு, சிறு திரையரங்குகளில் அனுமதி அளிக்கின்றனர். ஏன் ? மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அனுமதி மறுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.
ஒரு வயது குழந்தைகளுக்கு என்ன ? தெரியப் போகிறது என்றும், புக் மை ஷோ செயலியில் பதிவு செய்தால், பணம் திருப்பி கிடைக்காது என்றும், திரையரங்கில் வந்து கேட்டதற்கு 7 நாட்கள் பிறகு தான் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். ஏழு நாட்கள் பிறகு எப்படி வருவார்கள் ? அதற்கு யாரு உத்தரவாதம் ? என்றும், செயலிலும் எந்த ஒரு ஆதாரங்களும் கேட்கவில்லை, திரையரங்கு வந்து கேட்டதற்கு எந்த ஒரு தகவலும் இல்லை, காவல் துறை மற்றும் தனியார் காவலர்கள் மட்டும் தடுக்கின்றனர். மற்றபடி எந்த ஒரு பதிலும் இல்லை என்று வாக்குவாதத்தில் வட்ட ரசிகர்கள் ….