கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்க கேட் அருகே viru turt என்ற பெயரில் கரூரில் முதல் முறையாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த செந்தில் பாலாஜிக்கு பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவித்தனர்.
ரிப்பன் வெட்டி மைதானத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜியை, தங்களுடன் கிரிக்கெட் ஆடி முதல் போட்டியை தொடங்கி வைக்கும்படி அங்கிருந்த கிரிக்கெட் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற செந்தில் பாலாஜி முதலில் பேட்டிங் செய்து அந்த மைதானத்தில் போட்டியை தொடங்கி வைத்தார். அவர்பேட்டிங் செய்தபோது அங்கு திரண்டிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.