Skip to content

மயிலாடுதுறை கடைக்காரர் கொலை- மகன் வெறிச்செயல்

மயிலாடுதுறை  அடுத்த  தரங்கம்பாடி தாலுகா கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(54). இவர் கீழையூர் உப்புச்சந்தை மாரியம்மன் கோயில் பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கெனவே ஜெயசெல்வி(45) என்பவருடன் திருமணமாகி சிவசர்மா, சபரி கிருஷ்ணன், அபினேஷ் ஆகிய 3 மகன்கள் உள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாக அவர்களை பிரிந்து, இரண்டாவதாக ரேவதி(30) என்பவரை திருமணம் செய்துகொண்டு, அவருடன் வசித்து வந்தார்.

ரேவதிக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். சிவக்குமாருக்கும் அவரது மூத்த தாரத்தின் மகன்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் சிவக்குமார் பழச்சாறு கடையில் இருந்தபோது அங்கு சென்ற, முதல் தாரத்தின் மூன்றாவது மகனான அபினேஷ் (20) தனக்கு கடன் அதிகம் இருப்பதாகவும், பணம் வேண்டும் என்றும்  சிவக்குமாரிடம் கேட்டுள்ளார்.

சிவக்குமார் பணம் தர முடியாது என்று மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. அப்போது, அபினேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவக்குமாரின் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில், நுரையீரலில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடலைக் கைப்பற்றிய செம்பனார்கோவில் போலீசார் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக
அனுப்பி வைத்து, அபினேஷை கைது செய்து, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்னையில் தந்தையை மகனே குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

error: Content is protected !!