Skip to content

குளித்தலை பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி.
இவர் குளித்தலையில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார்.

இவர் வீட்டில் கடந்த 18ம் தேதி அதிகாலை முகமூடி அணிந்j  மர்ம நபர்கள்  வீடு புகுந்து அரிவாளால் அவரையும் அவரது இளைய மகள் பல் மருத்துவர் அபர்ணாவையும்  தாக்கி 7 லட்சம் பணம் மற்றும் 62 கிராம் எடையுள்ள நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கய்யா . 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குளித்தலை அருகே உள்ள  பரளி கிராமத்தை சேர்ந்த 2 மாதங்களுக்கு  முன் பணிநீக்கம் செய்யப்பட்ட திருச்சி ஆயுதப்படை காவலர் பிரகாஷ், ரெங்கநாதன், பார்த்திபன், ரவிசங்கர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், பால்பாண்டி, அஜய், திருச்சியை சேர்ந்த ஹரீஸ், தரகம்பட்டி ஜெயகணபதி சிட்பண்ட்ஸ் உரிமையாளர் முருகேஷ் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.   அவர்களை  குளித்தலை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

error: Content is protected !!