Skip to content

செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில நபர்கள், இவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்து. செய்வினை எடுக்க பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி இவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ12 லட்சத்திற்கு மேல் பணத்தினைப் பெற்று ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகார் அடிப்படையில், அரியலூர் சைபர் க்ரைம் போலீசார் 04.04.2022 வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக  வல்லவராஜ் மற்றும் தர்மராஜ் என்கிற கிருஷ்ணன் என 2 பேரை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இன்றைய தினம் இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, 2வது குற்றவாளி தர்மராஜ் என்கிற கிருஷ்ணன் த/பெ சத்யா என்பவரை குற்றவாளி என தீர்ப்பளித்து. அவருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனையும் , 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக கடந்த 24.01.2024 அன்று முதல் குற்றவாளியான வல்லவராஜ்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!