மயிலாடுதுறை லலிதா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்த சுமன்சங்கர் என்ற இளைஞர் கடந்த 23-ஆம் தேதி மாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர், தனது ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனத்தை கோயிலின் வடக்கு வாசலின் உள்ள நிறுத்தியுள்ளார். தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தை
காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவர் கோயில் நிர்வாகத்தை அணுகி, அப்பகுதி சிசிடிவி பதிவுகளைப் பெற்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த சிசிடிவி பதிவில் தொப்பி அணிந்த ஒருவர் சுமன்சங்கரின் வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திறந்து எடுத்துச்செல்வது பதிவாகியுள்ளது. இதுகுறித்து, காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.