அரியலூர் மாவட்டம் தெற்கு பரணம் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் அன்பரசன் வயது 28. திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன இவருக்கு சுவேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அன்பரசன் மற்றும் தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் இருசக்கர வாகனத்தில் மேலமாத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அரியலூர் அருகே அல்லிநகரம் புறவழிச்சாலை அருகே வரும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் எதிரே வந்த வேனின் டயரில், தலைப்பகுதி மாட்டி அன்பரசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் படுகாயம் அடைந்த ராஜேஷ் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணம் ஆகி இரண்டே மாதங்கள் ஆன வாலிபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் : சாலை விபத்தில் வாலிபர் படுகாயம்- 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நெகிழ்ச்சி செயல் 02 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கச் செயின் மற்றும் ஆண்ட்ராய்டு போனை உறவினர்களிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.
அரியலூர் அருகே சாலை விபத்து ஏற்பட்டதாக 108 ஆம்புலன்ஸ்க்கு, இன்று வந்த தகவலின் பேரில் அவசரகால மருத்துவ நுட்புணர் ஆனந்தராஜ் மற்றும் அவசரகால ஓட்டுநர் கொளஞ்சியப்பன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அன்பரசன் என்பவர் உயிரிழந்த நிலையிலும், தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ராஜேஷை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ராஜேஷ் அணிந்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் செயின் மற்றும் ஆண்ட்ராய்டு போன் ஆகியவற்றை ராஜேஷ்ன் அவரது உறவினரிடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர். துயரமான நிலையிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயல், அரியலூர் மாவட்டத்தில் பெரும் நெகிழ்ச்சியையும், பொதுமக்களிடத்தில் வரவேற்பையும் பெற்றுள்ளது.