அன்பில் அறக்கட்டளை சார்பாக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழி நினைவாக மாநில அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டிகள் 3 நாட்கள் அண்ணா அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப் போட்டியில் தமிழகத்தில் தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் 12 அணியினரும் மாணவிகள் பிரிவில் 8 அணிகளும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் பிரிவில் சூப்பர் லீக் முறையில் நடைபெற்றது இதில் எஸ்.டி.ஏ.டி. தஞ்சாவூர் அணியினர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தனர். இரண்டு வெற்றி ஒரு தோல்வியோடு வேலம்மாள் சென்னை அணியினர் இரண்டாம் இடம் பிடித்தனர் .
மாணவிகள் பிரிவில் சூப்பர் லீகில் குமுதா ஈரோடு அணியினர் அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர் சென்ட் ஆன்ஸ் கடலூர் அணியினர் இரண்டு வெற்றி ஒரு தோல்வியோடு இரண்டாம் இடத்தை பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அன்பில் அறக்கட்டளை நிறுவனர் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்து இருந்தார். பரிசளிப்பு விழாவில் அன்பில் அறக்கட்டளை நிறுவனர்,தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் இவ்விழாவில் திருச்சி திமுக கிழக்கு மாநகர செயலாளர் மலைக்கோட்டை மதிவாணன், பிச்சையப்பா, சிவாஜி அனைவரும் கலந்து கொண்டனர். அன்பில் கோவிந்தராஜன் வரவேற்றார் ,அன்பில் சீதாராமன் நன்றி கூறினார்.