கரூர் திமுக அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர், கரூர் சட்டமன்ற
உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1)திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழாவினை செப்டம்பர் 17ஆம் தேதி கருவை நடத்த அனுமதி வழங்கி கரூர் மாவட்டத்திற்கு முப்பெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கூட்டத்தின் நன்றி தெரிவித்தனர்.
2,17.09.2025 அன்று கரூரில் நடைபெறும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், கழகத்தின் முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் கழகத் தலைவர். இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வருக்கு கரூர் மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுப்பது தானே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3)தமிழ்நாட்டின் தனித்தன்மை மற்றும் தமிழர்களின் சுயமரியாதை பாதுகாக்கும் அரசியல் அரணாக விளங்கும் தலைவராக பொறுப்பேற்று எட்டாம் ஆண்டில் வழிநடத்தி வரும் தந்தை பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப் பிடித்து பேரறிஞர் அண்ணாவின் வழியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கட்டளைகளைக் கன்போல் காத்த திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்தியா தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும்,
4) அனைத்து சேவைகளையும் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்திடும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் வயது முதிர்ந்தோர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக ரேஷன் பொருள்களை வழங்கிடும் தாயுமானவர் திட்டம் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நகர்ப்புற மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் மற்றும் மண் மொழி வானம் காக்க ஊரணையில் தமிழ்நாடு முன்னெடுப்பு என தமிழ்நாடு மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்கள் உறுதுணையாக இருப்பதை உறுதி செய்திடும் வகையில் 2026 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொற்கரங்களிலும் வழங்கிட வேண்டுமென கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.