திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் ஜெண்டாஹல்லி மார்க்கெட் மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் இம்ரான் (31) இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம்போல மசூதி அருகே தனது சுசுகி மேக்ஸ் 100 இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் திரும்பவும் மாலை 4 மணியளவில் வந்து வெளியே பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்தது
பின்னர் மசுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது மர்ம நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. தற்போது வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் தொடர் இருசக்கர வாகனம் திருடு போவதும் மேலும் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகுவதும் தற்போது வாடிக்கையாக உள்ளது.
மேலும் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது..