Skip to content

பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி.. புதுகை கலெக்டர் பார்வை

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வளாகத்திலுள்ள புதிய கலையரங்கத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,   இன்று (02.09.2025) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.கோ.ராஜராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு)  திருமால், புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் சங்கத் தலைவர்  து.லதா உத்தமன், மாவட்ட குறைதீர் ஆணைய உறுப்பினர்கள் திரு.எ.அழகேசன்,  சுகுணாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!