மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…
திருச்சி கே கே நகர் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சிலர் நேற்று மாவட்ட குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். தொடர்ந்து 4 மாணவிகள் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்தனர். உடனடியாக இந்த புகார் குறித்து செயல்படத் தொடங்கிய மாவட்ட குழந்தைகள் உதவி அலுவலர்கள் மாணவிகள் அளித்த புகார் குறித்து கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி திருச்சி கே கே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கடந்த ஐந்தாண்டுகளாக பணியாற்றி வரும் கருமண்டபத்தை சேர்ந்த டேனியல் சுரேஷ் 46 என்ற ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீபத்தில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட கேகே நகர் மாநகராட்சி பள்ளியில் இருந்து மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது திருச்சியில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டூவீலர் திருடிய வாலிபர் கைது..
திருச்சி உறையூர் கம்மாள தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் 29இவர் கடந்த 29ஆம் தேதி தன் டூவீலரை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது டூவீலர் திருடு போனது தெரியவந்தது இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து உறையூர் நெசவாளர் காலனி சேர்ந்த அருண்குமார் 21 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தையல் தொழிலாளி தற்கொலை
திருச்சியில் தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார விசாரிக்கின்றனர்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முகமது அக்பர் 58 தையல் தொழிலாளி இவருக்கும் ஷகிலா பேகம் என்ற பெண்ணிற்கு திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷகிலா பேகம் இறந்ததால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ரஷ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இதைத்தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி முகமது அக்பர் ஏர்போர்ட் பகுதியில் உள்ள தன் மகனான தவ்பிக் அகமது தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார் இதை தொடர்ந்து கடந்த நான்காம் தேதி முகம்மது அக்பர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
முதியவர் சாவு..
திருச்சி திருவானைக்கோவில் வெள்ளித்திரு முத்தம் கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் கடந்த நான்காம் தேதி தன் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் ரோந்து பணி சென்றார் அப்போது ஸ்ரீரங்கம் கோயில் அருகே 71 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இதைத்தொடர்ந்து அந்த முதியவர் கடந்த மூன்றாம் தேதி உயிரிழந்தார் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தொழிலாளி பலி ..
மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னராசு 37 இவர் கூலி வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி மேலூர் பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு வேலைக்கு சென்றார் அப்போது மாம்பழம் பறிக்க மரத்தின் மீது எறிய போது 20 அடி உயரத்தில் இருந்து சின்னராசு எதிர்பாராத விதமாக கீழே விழுந்து மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இது கறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
டூ வீலர் தீப்பிடித்து எரிந்து நாசம்..
திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் முகமது இக்பால் 41 இவர் கடந்த மூன்றாம் தேதி இரவு தன் டூவீலரில் வீட்டின் அருகே நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார் நள்ளிரவு திடீரென டூவீலர் தீப்பிடித்து எரிந்து கருகியது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்