Skip to content

பெண் பார்க்க சென்ற மணமகன்-நண்பன் விபத்தில் பலி… திருச்சியில் சோகம்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தொட்டியம் தாலுகா வரதராஜபுரம் பிரிவு சாலையில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, சென்னார்பட்டி, மூலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் மோகன்ராஜ் (27) செல்வம் மகன் தினேஷ்(28)
ஆகிய இருவரும் சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள ஹாலோ பிளாக் கடையில் வேலை செய்து வருகின்றனர். மேற்படி இறந்த மோகன்ராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி விவாகரத்து நடைபெற்றுள்ளது. நேற்று இரவு இரண்டாவது திருமணம் செய்வதற்காக பெண் பார்க்க சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது. அப்போது நடைபெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே டூவீலரில் வந்த 2 பேரும்  அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தொட்டியம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!