Skip to content

”காந்தி கண்ணாடி” படத்தை – கோவையில் ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர் பாலா

  • by Authour

காந்தி கண்ணாடி திரைப்படத்தை பொதுமக்களுடன் ரசிகர்களுடன் கண்டுகளித்த நடிகர் பாலா – திரைப்படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு படத்திற்கான ஆதரவிற்கு கோவை மக்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் பாலா..!

நடிகர் பாலா நடித்து வெளியாகிய காந்தி கண்ணாடி திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

திரையிட்ட திரையரங்குகளை நேரில் சென்று காந்தி கண்ணாடி திரைப்படத்திற்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதைக் குறித்து படத்தின் குழுவினர் நேரில் சென்று கேட்டறிந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை  \

அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் காந்தி கண்ணாடி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது,

நேற்று நடிகர் பாலா மற்றும் படத்தின் குழுவினர் நேரில் சென்று படத்தை மக்களுடன் மக்களாக கண்டுகளித்து படம் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுடன் தங்களுடைய இந்த படத்திற்கான அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய பாலா கூறியதாவது – கோவை மக்கள் தனக்கு நல்ல ஆதரவை கொடுத்துள்ளனர் என்பதை இந்த படம் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.எனவும் நான் வளர்ந்த பாதையில் இருந்து தற்போது வரை மக்கள் இல்லை என்றால் நான் தற்போது இந்த இடத்தில் இல்லை. நீங்கள் கொடுத்த வரவேற்பு உற்சாகம் தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது.
தொடர்ந்து தங்களை உற்சாகப்படுத்துவதற்கான அனைத்து பாதைகளிலும் நான் தேர்ந்தெடுப்பேன் என தெரிவித்ததுடன் கடைசி வரை நன்றி மறவாமல் பயணிப்பேன் என தெரிவித்தார்.

நடிகர் பாலாவிற்கும் படக்குழுவினர்களுக்கும் திரையரங்கு ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பை அளித்ததை தொடர்ந்து திரைப்படம் காண வந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் பாலா மற்றும் பட குழுவினர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!