வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில் இருந்து தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
அந்த பிரச்சார பயணத்தை சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தொடங்க அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸியான கடந்த சனிக்கிழமை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார் ஆனால் சத்திரம் பேருந்து நிலையத்தில் அவர்களுக்கு அனுமதி தர முடியாது என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து அவர்களை துணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று துணை ஆணையர் சிபினிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவை துணை ஆணையர் பெற்றுக் கொண்டுள்ளார் மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதா என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை கிடைக்கவில்லை