சென்னை, திருவொற்றியூரில் சுற் றித்திரிந்த, ‘மெக்சிகன் ஸ்பைடர்’ குரங்கை, வனத்துறையினர் நேற்று பிடித்தனர். சென்னை, திருவொற் றியூர் அருகே காலடிப் பேட்டை புது தெருவில் நேற்று இரவு 8:00 மணி அளவில், அரிய வகை குரங்கு ஒன்று சுற்றித்தி ரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வேளச்சேரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. காலடிப்பேட்டைக்கு விரைந்து வந்து வனத்து றையினர் 8:45 மணி அள வில் குரங்கை
பிடித்து சென்றனர். கூண்டில் அடைத்து எடுத்து பிடிபட்ட குரங்கு, ‘மெக்சிகன் ஸ்பைடர்’ வகையைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இந்த குரங்கு எங்கிருந்து வந்தது என வனத்துறையினர் மற்றும் திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டை சேர்ந்த குரங்கு திருவொற்றியூர் பகுதியில் சுற்றி திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த குரங்கை வனத்துறையினர் பிடித்து வண்டலூர் பூங்காவுக்கு எடுத்துச் சென்றனர்.