Skip to content

பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கு.. .திருச்சி கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Authour

கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் சாலை மார்க்கமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து சவுக்கு சங்கரை ஆஜர் படுத்திவிட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல முற்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் பெண் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமியை தரக்குறைவாக பேசியதாக கூறி, உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி ஜோதிலட்சுமி திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த வழக்கு இன்று திருச்சி நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து சவுக்கு சங்கர் விசாரணைக்கு நீதிபதி பரம்வீர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நேரில் விசாரணை மேற்கொண்ட பின்னர் 12.11.2025 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!