Skip to content

கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

கரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர், காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச்

செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. கண்தானம் மற்றும் உடல்தானம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாநாகராட்சி கவுன்சிலர் தண்டபாணி உட்பட்ட 10 பேர் பதிவு செய்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலரிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்கவாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!