சென்னையிலிருந்து திருச்சி விமானநிலையம் வந்தடைந்தார் விஜய்..விமான நிலையத்தில் வாகனங்களில் 2ஆயிரம் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மரக்கடை பகுதியில் காலை 10.30 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார். அதிக அளவில் தொ்ணடர்கள் குவிந்ததால் பாலக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சியை தொடடர்ந்து அரியலூர், பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மரக்கடையில் தொண்டர்கள் குவிந்ததுள்ளனர். விஜய்
பிரசாரம் செய்யும் பஸ்சில் 5 நபர்கள் வரை பேருந்து தளத்தின் மேலே நின்று பேசும் அளவிற்கு இட வசதி உள்ளது. 12 ஒலிபெருக்கிகள், சிசிடிவி கேமரா , மின்விளக்குகள் உள்ளன. முழுமையாக குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் விஜய் பிரசாரம் செய்கிறார். விமான நிலையம் முன்பு தடுப்புகளை தாண்டி தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.