
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருமால் நகர் பகுதியில் 2 மாத காலமாக குடிநீர் வராத காரணத்தாலும் அப்படியே குடிநீர் வந்தாலும் அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் அவதிப்பட்டு வந்தனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் செவி சாய்க்காதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென
அலங்காயத்திலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலையில் கட்டைகள் மற்றும் கற்களை போட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதின் பேரில் அங்கிருந்து பொதுமக்கள் கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
